‘‘தீரனின் உண்மை சம்பவம் பிரமிக்க வைக்கிறது!’’ - சூர்யா

‘‘தீரனின் உண்மை சம்பவம் பிரமிக்க வைக்கிறது!’’

செய்திகள் 17-Nov-2017 3:46 PM IST VRC கருத்துக்கள்

வினோத் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. சில உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள போலீஸ் கதையான இப்படத்திற்கு பிரபலங்களின் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. இப்படத்தை பார்த்து நடிகர் சூர்யா தெரிவித்துள்ள கருத்து விவரம் வருமாறு:

‘தீரன்’ ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து காவல்துறை அதிகாரிகள் வாழ்நாளில் காணப்படும் வழக்குகளை வைத்து எடுக்கப்பட்ட படம். எவ்வளவுதான் கற்பனை செய்தாலும் உண்மை சம்பவம் நம்மை பிரமிக்க வைக்கும். தமிழ் நாட்டில் 10 வருடமாக கண்டுபிடிக்க முடியாத ஒரு வழக்கை இருபது காவல்துறை அதிகாரிகள் சேர்ந்து எப்படி கண்டு பிடித்தார்கள் என்பதே இப்படத்தின் கதை.

இயக்குனர் வினோத்தின் எழுத்தும், இயக்கமும் ‘சதுரங்கவேட்டை’யில் எப்படி பேசப்பட்டதோ அதேபோல் இதிலும் பேசப்படும். ஜிப்ரானின் இசை அருமையாக உள்ளது. சத்யன் சூர்யனின் ஒளிப்பதிவு முழுமையாக பிரமிப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தின் மூலமாக அதிக விஷயங்கள் வெளியில் தெரிகிறது. ஒரு காவல் துறை அதிகாரியின் வாழ்க்கையில் என்ன என்ன நடக்கின்றது என்பதை இதன் மூலம் அறியலாம். உண்மையான சம்பவத்தோடு சேர்த்து கமர்ஷியல் படம் எடுத்துள்ளார்கள். திரையரங்கில் வந்து இந்த படத்தை பாருங்கள்’’ என்று கூறியுள்ளார் சூர்யா!

#TheeranAdhigaaramOndru #Karthi #RakulPreet #Ghibran #DreamWarriorPictures #Suriya #HVinoth

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - லாலி லாலி பாடல் வீடியோ


;