‘அறம்’ படத்தை பாராட்டிய சிவகுமார்!

நயன்தாராவின் அறம் படத்திற்கு நடிகர் சிவகுமார் பாராட்டு!

செய்திகள் 16-Nov-2017 12:26 PM IST VRC கருத்துக்கள்

கடந்த வாரம் வெளியாகி பத்திரிகையாளர்கள் மற்றும் திரைத்துரையினர் பாராட்டுக்களுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் நயன்தாராவின் ‘அறம்’. கோபி நயினார் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு பலவேறு தரப்பிலிருந்து பெரும் வரவேற்பும் பாராட்டும் கிடைத்து கொண்டிருக்கும் நிலையில் நடிகர் சிவகுமாரும் இப்படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளார். ‘அறம்’ பட இயக்குனர் கோபிநயினாரை அழைத்து, ‘25 ஆண்டு காலத்தில் இப்படியொரு படத்தை நான் பார்த்ததில்லை’ என்று கூறி கோபி நயினாரையும் அவரது படக்குழுவினரையும் பாராட்டியுள்ளார். சிவகுமாரின் இந்த பாராட்டால் ‘அறம்’ படக்குழுவினர் மேலும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்!

#Aramm #Sivakumar #Nayanthara #GopiNaianar #KJRStudios #Ghibran #Sunulakshmi #Rams #VelaRamamoorthy #Aramm2

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - லாலி லாலி பாடல் வீடியோ


;