‘துணிச்சலுடன்’ மீண்டும் படத்தை ரிலீஸ் செய்யும் சுசீந்திரன்!

தியேட்டர்களிலிருந்து ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம் நீக்கம். ரீ-ரிலீஸ் ப்ளானில் சுசீந்திரன்!

செய்திகள் 16-Nov-2017 12:16 PM IST VRC கருத்துக்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் சென்ற 10-ஆம் தேதி வெளியான படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. சந்தீப், விக்ராந்த், ஹரீஷ் உத்தமன், மெஹ்ரின், சாதிகா முதலானோர் முக்கிய பாத்திரங்களில் நடித்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் படத்தை மேலும் விறுவிறுப்பாக்குவதற்காக ஹீரோயின் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கிவிட்டார். ஹீரோயின் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கிவிட்ட பிறகு சில தியேட்டர்கள் ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் நாளை முதல் எந்த தியேட்டரிலும் ஓடாது என்றும் இப்படத்தை மீண்டும் அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யவிருப்பதாகவும் ஒரு வீடியோ பதிவின் மூலம் சுசீந்திரன் தெரிவித்துள்ளார். அதில், ‘சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தை அடுத்த மாதம் 15-ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளோம். இந்த படத்தை பார்த்த அனைவருக்கும் நன்றி! இந்த படத்தை பார்த்து உண்மையான விமர்சனங்கள் தந்தவர்களுக்கும் உள்நோக்கத்துடன் விமர்சித்தவர்களுக்கும் நன்றி’’ என்று அதில் கூறியுள்ளார் சுசீந்திரன்.

#NenjilThunivirundhal #Suseendiran #SundeepKishan #Vikranth #DImman #Mahreen #Shathika #AnnaiFilmFactory

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சுட்டுப்புடிக்க உத்தரவு டீஸர்


;