இரண்டாம் பாகம் வரிசையில் ‘அறம்-2’

கோபி நயினார் இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில்  ‘அறம்-2’ உருவாகிறது!

செய்திகள் 16-Nov-2017 10:15 AM IST VRC கருத்துக்கள்

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா, சுனுலட்சுமி, ராம்ஸ் முதலானோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘அறம்’. சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதோடு விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இப்படக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். ‘அறம்’ படத்தை தயாரித்த ராஜேஷ் மற்றும் இயக்குனர் கோபி நயினார் இதுகுறித்த தகவல்களை மீடியாவுக்கு அளித்த பேட்டிகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். சமீபகாலமாக கதைக்கும், கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் நயன்தாரா இரண்டாவது பாகத்திலும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கிறது.

#Aramm2 #Nayanthara #GopiNaianar #KJRStudios #Ghibran #Sunulakshmi #Rams #VelaRamamoorthy #Aramm

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காதல் கடல் தானா வீடியோ பாடல் - ராட்சசன்


;