11 ஆண்டுகளுக்கு பிற்கு விஜய் அப்பாவும், விஜய் ஆண்டனியும் இணையும் படம்!

11 ஆண்டுகளுக்கு  பிற்கு விஜய் அப்பாவும், விஜய் ஆண்டனியும் இணையும் படம்!

செய்திகள் 15-Nov-2017 3:11 PM IST VRC கருத்துக்கள்

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி பற்றி ‘டிராஃபிக் ராமசாமி’ என்ற பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் டிராஃபிக் ராமசாமி கேரக்டரில் எஸ்.ஏ.சந்திரசேகரனும், அவரது மனைவியாக ரோகிணியும் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஆர்.கே.சுரேஷ், உபாசனா, அம்பிகா, லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, அம்மு ரவிச்சந்திரன், மதன்பாப், மோகன்ராம் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் இசை அமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியும் நடிக்கிறார். ‘சுக்ரன்’ படம் மூலம் விஜய் ஆண்டனியை இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆவார். அந்த படம் வெளியாகி 11 ஆண்டுகள் ஆன நிலையில் ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர் எஸ்.ஏ.சந்திரசேகரனும், விஜய் ஆண்டனியும். இதில் விஜய் ஆண்டனி சமூக அக்கறையுள்ள ஒரு இளைஞனாக, திரைப்பட நடிகராகவே நடிக்கிறார்.

ஈரோடு மோகன் தயாரிக்கும் இந்த படத்தை பூனாவில் திரைப்பட தொழில்நுட்பம் படித்து விட்டு, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் 5 ஆண்டுகள் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஜய் விக்ரம் இயக்குகிறார். இந்த படத்தின் ஒளிப்பதிவை குகன் எஸ்.பழனி கவனிக்கிறார். ‘ஹர ஹர மகாதேவகி’ படப் புகழ் பாலமுரலி பாலு இசை அமைக்கிறார்.

#VijayAntony #SAChandrashekar #Sukran #TrafficRamasamy #VijayVikram #BalamuraliBala

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திமிருபுடிச்சவன் டீஸர்


;