விஜய்-யை தொடர்ந்து விஜய் ஆண்டனியும் சூப்பர் ஸ்டார் ஆவார்! - சரத்குமார்

விஜய் ஆண்டனியின் ‘அண்ணாதுரை’ இசை வெளியீட்டு செய்திகள்!

செய்திகள் 15-Nov-2017 2:07 PM IST VRC கருத்துக்கள்

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘அண்ணாதுரை’ இம்மாதம் 30-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. இயக்குனர்கள் வசந்தபாலன், சுசீந்திரன் முதலானோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சீனிவாசன் இயக்குனராக அறிமுகமாகும் இந்த படத்தை ராதிகா சரத்குமாரின் ‘ஆர்.ஸ்டுடியோஸும்’, விஜய் ஆண்டனியின் ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷ’னும் இணைந்து தயாரித்துள்ளது. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து, இசை அமைத்து படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது.

அப்போது ராதிகா சரத்குமார் பேசும்போது, ‘‘ராடான்’ தயாரித்த ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ டி.வி.தொடருக்கு விஜய் ஆண்டனியை இசை அமைக்க வைத்து அறிமுகப்படுத்தியதிலிருந்து எனக்கு அவரை தெரியும். அவருடைய வளர்ச்சி அபாரமானது. என்னுடைய கணவர் சரத்குமாருக்காக வந்த கதை தான் ‘அண்ணாதுரை’. ஆனால் இந்த கதையில் என்னை விட விஜய் ஆண்டனி நடித்தால் நன்றாக இருக்கும் என்றார் என் கணவர் சரத்குமார். அதற்கு பிறகு இந்த கதையை அவரை கேட்க வைத்து அதை நாங்கள் இணைந்து தயாரிக்க முடிவு செய்தோம். நல்ல கதைகளை தேர்வு செய்து வரிசையாக வெற்றிப் படங்களை கொடுத்து வரும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள இந்த படமும் வெற்றிப் படமாக அமையும்,. இந்த படத்தில் நிறைய பாசிட்டிவான விஷயங்கள் இருக்கிறது. எப்போதுமே பாசிட்டிவான விஷயங்கள் கை கொடுக்கும்’’ என்றார்!

பத்தின் இயக்குனர் சீனிவாசனுக்கு இது முதல் மேடை என்பதாலோ என்னவோ கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டவராய் பேசும்போது, ‘‘இந்த படம் இம்மாத்ம் 30-ஆம் தேதி வெளியாகிறது. டிசம்பர் 1-ஆம் தேதி தமிழ் சினிமாவில் அதுவரை வெளியான படங்களில் இருந்து சிறந்த 50 திரைப்படங்களை தேர்ந்து எடுத்தால் அதில் இந்த ‘அண்ணாதுரை’ திரைப்படமும் இருக்கும்’’ என்று தான் இயக்கிய படம் மீதிருக்கும் நம்பிக்கையை தெரிவித்தார்.

கதாநாயக்ன விஜய் ஆனடனி பேசும்போது, ‘‘எல்லோரும் என்னை புகழ்ந்து பேசினார்கள். என்னோட வெற்றிக்கு நான் மட்டும் காரணம் அல்ல. எனக்கு பின்னாடி நிறைய பேர் இருக்கிறார்கள். சரத்சார் நடிக்க வேண்டிய இந்த கதையில் என்னை நடிக்க வைத்து இந்த படத்தை தயாரித்ததற்கு ராதிகா மேடத்துக்கு என்னோட நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

சரத்குமார் பேசும்போது, ‘‘இங்கு பேசிய நிறைய பேர் ஏதாவது காண்ட்ராவர்சி பண்ணுங்கள் அப்போது தான் படம் நன்றாக ஓடும் என்றார்கள். இந்த படத்திற்கு காண்ட்ராவர்சி தேவையில்லை! இந்த படத்தோட கன்டெண்டுக்காகாவெ இப்படம் நன்றாக ஓடும். இந்த படத்தை இயக்கியிருக்கிற சீனிவாசன் சிறந்த ஒரு டெக்னீஷியன்! வைரம் போன்றவர்! வைரத்தை பார்க்கும்போது இது வைரம் என்று டக்கென்று நமக்கு தோன்றும்! அது மாதிரி சீனிவாசன். அதைப் போலத்தான் விஜய் ஆண்டனியும்! நான் கமலா தியேட்டரில் நடந்த ஒரு படத்தின் நூறாவது நாள் விஷாவில் நடிகர் விஜய் பற்றி பேசும்போது அவர் சூப்பர் ஸ்டார் ஆவார் என்று சொன்னேன்! அதைப் போல இந்த விழாவில் சொல்கிறேன், இந்த விஜய் ஆண்டனியும் ஒரு சூப்பர் சூப்பர் ஸ்டார் ஆவார் என்று! அதைப் போல இந்த படத்தை இயக்கியிருக்கும் சீனிவாசனும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு வருவார். அப்படி ஒரு ஃபயர் அவரிடம் இருக்கிறது. இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக அமையும்’’ என்றார்.

இவ்விழாவில ‘அண்ணாதுரை’ படத்தின் 10 நிமிட காட்சிகளை திரையிடப்பட்டதோடு ஒரு பாடலையும் திரையிட்டார்கள். விழாவில் தயாரிப்பாளர்கள் கே.ஈ.ஞானவேல்ராஜா, டி.சிவா, காட்ரகட் பிரசாந்த், தனஞ்சயன், இயக்குனர்கள் வசந்தபாலன், கௌரவ் நாராயணன், கிருத்திகா உதயநிதி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்!

#Annadurai #VijayAntony #Mahima #DianaChampika #RStudios #Sarathkumar #Radhika #Superstar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திமிருபுடிச்சவன் டீஸர்


;