‘தீரன்’ படத்தைப் பார்க்கத் தூண்டும் 5 முக்கிய விஷயங்கள்!

‘தீரன்’ படத்தைப் பார்க்கத் தூண்டும் 5 முக்கிய விஷயங்கள்!

முன்னோட்டம் 15-Nov-2017 12:07 PM IST Top 10 கருத்துக்கள்

ஜோக்கர், காஷ்மோரா படங்களைத் தொடர்ந்து ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கும் படம் ‘தீரன் அதிகார ஒன்று’. சமீபத்திய படங்களில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் குறித்த 5 முக்கிய விஷயங்களை இங்கே தொகுத்துள்ளோம்.

1. 1995 முதல் 2005 வரை நடைபெற்ற சில உண்மைச்சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார்கள். இப்படத்தில் இடம்பெறும் சில குற்றச் சம்பவங்களும், அதனை விசாரிக்கும் காவல் அதிகாரி தீரன் திருமாறனின் இன்வெஸ்டிகேஷனும் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாய் இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

2. படத்திற்குப் படம் வித்தியாசம் காட்டி வரும் நடிகர் கார்த்தி, ‘தீரன்’ படத்தில் கடுமையான உழைப்பைக் கொட்டியிருக்கிறார் என்பது டீஸர், டிரைலர், புரமோக்களைப் பார்க்கும்போதே தெரிகிறது. குறிப்பாக பாலைவன மணலுக்கு அடியில் பதுங்கியிருந்து வில்லன்களை துரத்தும் காட்சிக்காக கிட்டத்தட்ட 90 வினாடிகளுக்கும் மேல் நிஜ பாலைவனத்தில் மண்ணுக்கடியில் புதைந்திருந்து நடித்துள்ளாராம் கார்த்தி. இதில் எந்த கிராபிக்ஸ் யுக்தியும் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3. கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்திருப்பது நிச்சயமாய் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதை என்பதால், பாடல்களுக்கு மட்டும் ஆடிச் செல்லும் வழக்கமான ஹீரோயினாக இல்லாமல் கதையின் ஓட்டத்திற்கு பயன்படும் கேரக்டரில் நடித்துள்ளாராம் ரகுல். அவர் சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் மற்றும் குடும்ப சென்டிமென்ட் காட்சிகளுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்குமாம்.

4. ‘சதுரங்க வேட்டை’ படத்தைத் தொடர்ந்து வினோத் இயக்கும் படம் என்பதாலேயே ‘தீரன்’ மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே எழுந்துள்ளது. அதிலும் இப்படத்திற்காக தமிழ்நாட்டின் சில முக்கிய காவல் அதிகாரிகளைச் சந்தித்து, சில தகவல்களைத் திரட்டியுள்ளாராம் வினோத். அதுமட்டுமில்லாமல், ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் சிலரையும் படத்தில் நடிக்க வைத்துள்ளார்களாம்.

5. ‘தீரன்’ படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள் பெரிதாக கவனிக்க வைத்துள்ளது. ஜிப்ரானின் பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டாகியுள்ள நிலையில், பின்னணி இசையிலும் கடினமாக உழைத்திருக்கிறாராம் ஜிப்ரான். ‘மாயா’ புகழ் சத்யன் சூரியனின் ஒளிப்பதிவில் பாலைவனம் சம்பந்தப்பட்ட காட்சிகள் பிரம்மாண்டமாய் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளதாம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ், ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்களின் படங்களுக்கு டிரைலர் எடிட் செய்து வந்த சிவநந்தீஸ்வரன் இப்படத்தின் மூலம் எடிட்டராக புரமோட் செய்யப்பட்டுள்ளார்.#TheeranAdhigaaramOndru #Karthi #RakulPreet #Ghibran #HVinoth #DreamWarriorPictures #SRPrabhu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;