ஜோதிகாவின் ‘நாச்சியாரி’ல் இணையும் சூர்யா!

பாலா, ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா கூட்டணியில் உருவாகும் ‘நாச்சியார்’ பட டீஸரை நடிகர் சூர்யா வெளியிடுகிறார்

செய்திகள் 14-Nov-2017 3:16 PM IST VRC கருத்துக்கள்

பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், ஜோதிகா முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் படம் ‘நாச்சியார்’. இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் மோஷன் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இப்படத்தின் டீஸரும் வெளியாகவிருக்கிறது. ‘நாச்சியார்’ டீஸரை நாளை (15-11-17) மாலை 6 மணிக்கு நடிகர் சூர்யா வெளியிடுகிறார். ‘மகளிர் மட்டும்’ படத்தை தொடர்ந்து ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்து வெளியாகவிருக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். பாலாவின் ‘பி.ஸ்டுடியோஸ்’ நிறுவனம் மற்றும் ‘EON STUDIOS’ இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பாடல்கள் மிக விரைவில் வெளியாகும் என்றும், அதனை தொடர்ந்து படத்தையும் மிக விரைவில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

#Naachiyaar #Bala #Jyothika #GVPrakashKumar #Suriya #MagalirMattum #Ilayaraja #EONSTUDIOS

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காற்றின் மொழி ட்ரைலர்


;