துல்கர் சல்மான் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் டைட்டில்!

துல்கர் சல்மான், ரித்துவர்மா நடிக்கும் படம்  ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’

செய்திகள் 14-Nov-2017 12:45 PM IST VRC கருத்துக்கள்

பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘வாயை மூடி பேசவும், மணிரத்னம் இயக்கத்தில் ‘ஓகே கண்மணி’ ஆகிய தமிழ் படங்களில் நடித்த துல்கர் சல்மான் அடுத்து நடிக்கும் நேரடி தமிழ் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த பாடல் வரியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இவர் ‘கோலிசோடா, ‘பத்து எண்றதுக்குள்ள’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவராம். இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக தெலுங்கில் வெளியான ‘பெல்லி சூப்புலு’ படத்தில் கதாநாயகியாக நடித்தவரும், தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வரும் ‘துருவநட்சத்திரம்’ படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்து வருபவருமான ரீத்துவர்மா நடிக்கிறார். காதலும், சாகசங்களும் நிறைந்த பயண கதையாம் இப்படம்! இதில் துல்கர் சல்மான் சாஃப்ட்வேர் என்ஜினியராக நடிக்கிறார். மலையாளத்தில் பல படங்களை தயாரித்த ஆண்டோ ஜோசஃப் தயாரிக்கும் இப்படத்திற்கு கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை டெல்லியில் துவங்கி தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.

#DulquerSalman #KannumKannumKollaiAdithaal #DesinghPeriyasamy #RituVarma #PelliChoopulu #DhruvaNatchathiram #Vikram

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நடிகையர் திலகம் டீஸர்


;