‘பாகுபலி’ ஸ்டைலில் ராஜாவாக நடிக்கும் ராணா!

மீண்டும் சரித்திர கதையில் ராஜா வேடமேற்கும் ராணா!

செய்திகள் 14-Nov-2017 11:42 AM IST VRC கருத்துக்கள்

மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற ‘ஒரு சிபிஐ டைரி குறிப்பு’ படம் உட்பட பல மலையாள படங்களை இயக்கியவரும், தமிழில் ‘மௌனம் சம்மதம்’ படத்தை இயக்கியவருமான கே.மது அடுத்து ஒரு சரித்திர கதையை இயக்குகிறார். இந்த படம் கேரளாவில் திருவிதாம்கூர் மகாணத்தை ஆண்ட மகாராஜா அனிழம் திருநாள் மார்த்தாண்டவர்மாவின் வாழ்க்கை வரலாறாகும்! ‘அனிழம் திருநாள் மார்த்தாண்டவர்மா - கிங் ஆஃப் ட்ராவன்கூர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் திருநாள் மார்த்தாண்டவர்மா ராஜா கேரக்டரில் ‘பாகுபலி’யில் பல்வாள் தேவனாக நடித்த ராணா நடிக்கிறார். இந்த தகவலை ராணாவே தனது ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார்! ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கவிருக்கிறது. இந்த படத்தில் மலையாளம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, கன்னட, ஹிந்தி கலைஞர்களும் பங்கேற்கவிருப்பதோடு இந்தியாவின் முன்னணி தொழில் நுட்ப கலைஞர்களும், ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்தில் பணியாற்றவிருக்கிறார்கள்.

#RanaDaggubati #Baahubali2 #KMathu #KingofTravincore #Rana #Mammootty #MounamSammatham

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு பட்டங்கள் பிடிக்காது - ரகுல் ப்ரீத்


;