‘சாமி-2’வில் மீண்டும் இணைந்த த்ரிஷா!

’சாமி-2’விலிருந்து விலகுவதாக தெரிவித்த த்ரிஷா இப்போது மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார்!

செய்திகள் 14-Nov-2017 10:23 AM IST VRC கருத்துக்கள்

ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சாமி ஸ்கொயர்’. ‘தமீன் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் ஷிபு தமீன் தயாரித்து வரும் இந்த படத்திலிருந்து சில கருத்து வேறுபாடுகள காரணமாக தான் விலகுவதாக த்ரிஷா தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது அந்த கருத்து வேறுபாடுகள் சரி செய்யப்பட்டது என்றும், அதனை தொடர்ந்து த்ரிஷா மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார் என்றும் தகவல் கிடைத்துள்ளது. சமீபத்தில் தனது மகளுக்கு திருமண்ம் நடத்தி வைத்த கையோடு விக்ரம் இப்போது ‘சாமி ஸ்கொயர்’ படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது கேரளாவிலுள்ள கண்ணூரில் நடைபெற்று வருகிறது.

#SaamySquare #Saamy2 #Vikram #Trisha #Hari #KeerthySuresh #ThameenFilms #ShibuThammeem

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹலோ - டிரைலர்


;