நகுலின் ‘செய்’யில் பாகிஸ்தான் பிரபலம்!

நகுலின் ‘செய்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் பாகிஸ்தான் பின்னணிப் பாடகர்!

செய்திகள் 13-Nov-2017 2:28 PM IST VRC கருத்துக்கள்

நகுல் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘செய்’. இந்த படத்தில் இடம்பெறும் ‘இறைவா…’ என்று துவங்கும் பாடலை பாகிஸ்தானை சேர்ந்த பாடகரான ஆதிஃப் அலி பாடியுள்ளார். ஏற்கெனவே பல பாகிஸ்தானி பாடல்களையும், ஹிந்தி பாடல்களையும் பாடியுள்ள இவர் ராய் லக்ஷ்மி நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ‘ஜூலி-2’ படத்தின் இசை அமைப்பாளர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு பாகிஸ்தான் பாடகர் தமிழில் பாடி அறிமுகமாவது இதுதான் முதல் முறை என்கின்றனர் ‘செய்’ படக்குழுவினர். ‘இறைவா…’ பாடலை ஆதிஃப் அலியுடன் இணைந்து ஹிந்துஸ்தானி பாடகரான சப்தஸ்வரா ரிஷியும் பாடியுள்ளார். நிக்ஸ் லோபஸ் இசை அமைப்பில் உருவாகியுள்ள இப்பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். மேலும் ‘செய்’ படத்தில் பிரபல பாடகர்களான சங்கர் மகாதேவன், சோனு நிகாம், ஸ்ரேயா கோஷல், பென்னி தயாள் ஆகியோருடன் அறிமுக பாடகியான கீதாஞ்சலியும் ஒரு பாடலை பாடியுள்ளார்.
‘டிரிப்பி டர்ட்டில் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் இப்படத்தை மனு மற்றும் உமேஷ் இணைந்து தயாரித்துள்ளார்கள். இந்த படம் டிசம்பர் 8-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

#Sei #Nakul #Iraiva #AtifAli #RaaiLaxmi #Julie2 #YugaBharathi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செய் ட்ரைலர்


;