விறுவிறுப்பாக நடந்து வரும் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’

இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கௌதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’

செய்திகள் 13-Nov-2017 1:31 PM IST VRC கருத்துக்கள்

’ஹர ஹர மகாதேவகி’ படத்தை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கும் படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. ‘ஹர ஹர மகாதேவகி’யில் நடித்த கௌதம் கார்த்திக்கே இப்படத்திலும் கதாநாயகன! கதாநாயகியாக சந்தானத்துடன் ’சர்வர் சுந்தரம்’, ‘சக்க போடு போடு ராஜா’ ஆகிய படங்களில் நடிக்கும் வைபவி சாண்டில்யா நடிக்கிறார். இவர்களுடன் சந்திரிகா ரவி, யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், பால சரவணன், மதுமிதா, ‘மீசையை முறுக்கு’ படப் புகழ் ஷாரா ஆகியோரும் நடிக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை தாய்லாந்தில் நடத்தி முடித்துவிட்டு படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். இதனை தொடர்ந்து இப்போது சென்னையில் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். இந்த படப்பிடிப்பை தொடர்ந்து இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் மீண்டும் தாய்லாந்த் செல்லவிருக்கின்றனர்.

‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு பாலமுரளி பாலு இசை அமைக்கிறார். தருண் பாலாஜி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை 2018 துவக்கத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

#IruttuAraiyilMurattuKuthu #HaraHaraMahadevaki #GuathamKarthik #SanthoshPJayakumar #VaibhaviSandiliya

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவராட்டம் டீஸர்


;