பிருத்திவிராஜ், பார்வதியுடன் இணையும் கணேஷ் வெங்கட்ராம்!

பிருத்திவிராஜ், பார்வதியுடன் ‘மை ஸ்டோரி’யில் நடிக்கிறார் கணேஷ் வெங்கட்ராம்!

செய்திகள் 13-Nov-2017 11:55 AM IST VRC கருத்துக்கள்

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துக்கொண்டவர்களில் கணேஷ் வெங்கட்ராமும் ஒருவர்! தற்போது செல்வா இயக்கத்தில் ‘வணங்காமுடி’ படத்தில் அரவிந்த்சாமி, ரித்திகா சிங், நந்திதா ஸ்வேதா முதலானோருடன் நடித்து வரும் கணேஷ் வெங்கட்ராம் பிருத்திவிராஜ், பார்வதி கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் ‘மை ஸ்டோரி’ என்ற மலையாள படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஏற்கெனவே மேஜர் ரவி இயக்கத்தில் மோகன்லாலுடன் ‘கந்தஹர்’ என்ற மலையாள படத்தில் நடித்திருக்கும் கணேஷ் வெங்கட்ராம் நடிக்கும் இரண்டாவர்து மலையாள படம் ‘மை ஸ்டோரி’. ரோஷினி தினகர் இயக்கும் இப்படத்தின் முதல் கட்ட பட்ப்பிடிப்பு மைசூரில் நடந்து முடிந்துள்ளது. இந்த படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஜனவரி மாதம் போர்ச்சுகல் நாட்டில் நடைபெறவிருக்கிறது. இதற்காக அந்நட்டிற்கு பயணமாகவிருக்கிறார்கள் கணேஷ் வெங்கட்ராம் மற்றும் படக்குழுவினர்!

#BiggBoss #GaneshVenkatraman #Prithviraj #RoshniDinekar #Parvathy #MyStory #Mysore

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எங்கிட்ட மோததே - வீடியோ


;