விக்ரம் மகனை "வர்மா"வாக்கிய பாலா

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிக்கும் படம் ‘வர்மா’

செய்திகள் 11-Nov-2017 10:30 AM IST VRC கருத்துக்கள்

தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் தமிழில் ரீ-மேக் ஆகிறது என்றும், பாலா இயக்கும் இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கிறார் என்ற தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாலா. தெலுங்கில் ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற பெயரில் வெளியாகி வசூல் குவித்த இந்த படத்திற்கு தமிழில் ‘வர்மா’ என்று பெயர் சூட்டியுள்ளார் பாலா. இந்த படத்தின் கதாநாயகி, தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த எந்த விவரங்களையும் வெளியிடாத பாலா அந்த தகவல்களையும் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது பாலா ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா நடிப்பில் இயக்கியுள்ள ‘நாச்சியார்’ படத்தின் இறுதிகட்ட வேலைகளில் பிசியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

#Vikram #Dhruv #Bala #ArjunReddy #Varma #ChiyaanVikram #Sketch

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாணிக் - டீசர்


;