தென்னிந்திய சினிமாவில் இது முதல் முறை!

19 வயது மாணவி இசை அமைக்கும் படம் ‘ஆண்டனி’

செய்திகள் 10-Nov-2017 3:39 PM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் குட்டிகுமார் இயக்கும் படம் ‘ஆண்டனி’. மியூசிக், எமோஷன், த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் ‘சண்டைக் கோழி’ படப் புகழ் லால் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் சில புதுமுகங்களும் நடிக்கும் இந்த படத்தை ‘ஆண்டனி புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்க, இப்படம் மறைந்த நடிகர் ரகுவரனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சிங்கிள் ட்ராக் மற்றும் டீஸரை சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார். இப்போது இந்த படத்தின் புதிய தகவலாக இப்படத்திற்கு 19 வயது மாணவியான சிவாத்மிகா இசை அமைக்கிறார் என்ற தகவலை படக்க்ழுவினர் வெளியிட்டுள்ளார்கள் தென்னிந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு படத்திற்கு 19 வயது மாணவி ஒருவர் இசை அமைப்பது இதுதான் முதல் முறை என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

#Kuttykumar #Antony #Sivathmika #PaRanjith #Raguvaran

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திமிருபுடிச்சவன் டீஸர்


;