‘துருவங்கள் 16’ ஸ்டைலில் ஜெய், அஞ்சலியின் ‘பலூன்’

ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடித்துள்ள ‘பலூன்’ டிசம்பர் 29-ஆம் தேதி ரிலீசாகிறது!

செய்திகள் 9-Nov-2017 5:30 PM IST VRC கருத்துக்கள்

இந்த வருடம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த மாதம் மற்றும் அடுத்த மாதம் ஏகபட்ட திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இந்த வரிசையில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பலூன்’ திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இப்படத்தை டிசம்பர் 29-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இதே தேதியில் தான் ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இந்த வருடம் அதே தேதியில் ‘பலூன்’ திரைப்படம் வெளியாகவிருக்கிறது. டிசம்பர் 25 கிரிஸ்துமஸ் பண்டிகைக்கு பெரிய திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அதைப்போல கிரிஸ்துமஸ் பண்டிகை முடிந்து அடுத்து வரும் பொங்கலுக்கும் நிறைய படங்கள் வெளியாவது வழக்கம். ஆனால் இந்த இரண்டு பண்டிகைக்கும் இடைப்பட்ட காலத்திலும் இப்போது படங்கள் வெளியாகின்றன.

#Balloon #Jai #Anjali #JananiIyer #YuvanShankarRaja #Sinish #ChandiniTamilarasan #YogiBabu #DhilipSubbarayan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;