சூர்யா, கார்த்தி இணையும் படம்!

சூர்யா தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம்!

செய்திகள் 9-Nov-2017 4:15 PM IST VRC கருத்துக்கள்

‘24’, ‘36 வயதினிலே’, ‘பசங்க-2’, ‘மகளிர் மட்டும்’ முதலான படங்களை தயாரித்த சூர்யாவின் ‘2D என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் ‘பசங்க-2’ படத்தை இயக்கிய பாண்டிராஜ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தை தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் ஐந்தாவது தயாரிப்பாக உருவாகும் இந்த படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். ‘வனமகன்’ படப்புகழ் சாயிஷா கதாநாயகியாக நடிக்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு துவக்க விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பை சூர்யா, கார்த்தி தயார் லட்சுமி சிவகுமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். சென்னையில் ஐந்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் படப்பிடிப்பை தொடர்ந்து தென்காசியில் 40 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.

இந்த துவக்க விழாவில் பாண்டிராஜ், சிவகுமார், சூர்யா, கார்த்தி, சத்யராஜ், சாயிஷா, பொன்வண்ணன், சூரி, ஸ்ரீமன், மாரிமுத்து பானுப்ரியா, ரமா, மௌனிகா, இளவரசு, சௌந்தர் ராஜா, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இயக்குனர்கள் மனோஜ்குமார், சுசீந்திரன், சுதா கொங்கரா,. இசை அமைப்பாளர் டி.இமான், ‘2டி’ இணை தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன், தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு. ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ லட்சுமணன், ‘சக்தி ஃபிலிம்ஸ்’ சக்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவ் டீஸர்


;