அஜித், விஜய் படத்தயாரிப்பாளருடன் இணையும் ‘மரகதநாணயம்’ இயக்குனர்?

ஏ.எம்.ரத்னத்துடன் இணையும் ‘மரகதநாணயம்’ இயக்குனர்!

செய்திகள் 8-Nov-2017 11:38 AM IST VRC கருத்துக்கள்

ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிப் பெற்ற படம் ‘மரகதநாணயம்’. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டம் பாகத்தையும் இயக்கவிருக்கிறார் ஏ.ஆர்.கே.சரவணன் என்றும் அதற்கு முன்னதாக தனது இரண்டாவது படமாக வேறு ஒரு கதையை இயக்க முடிவு செய்துள்ளார் ஏ.ஆர்.கே.சரவணன் என்றும் தகவலை ஒரு சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவலாக இப்போது இந்த படத்தை கமல் ஹாசன், அஜித், விஜய், விக்ரம் உட்பட பல முன்னனி நடிகர்கள் நடித்த படங்களை தயாரித்தவரும், சமீபத்தில் வெளியான ‘கருப்பன்’ படத்தை தயாரித்தவருமான ஏம்.ரத்னம தயாரிக்கவிருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இது சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் இப்போது நடந்து வருகிறது. இந்த பேச்சு வார்த்தைகள் முடிவடைந்ததும் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

#Aadhi #NikkiGalrani #ARKSaravanan #MaragathaNaanayam #Ajith #Vijay #Vedalam #Karuppan #VijaySethupathi #AMRatnam #SriSaaiRaamCreations

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

யூ டர்ன் - ட்ரைலர்


;