‘‘நயன்தாரா ஆதரவால் தான் இயக்குனரானேன்’’ – ‘அறம்’ கோபி நயினார்

‘அறம்’ படம் வரக்கூடாது என்று நிறைய பேர் செயல்பட்டார்கள்! - இயக்குனர் கோபி நயினார்!

செய்திகள் 7-Nov-2017 11:21 AM IST VRC கருத்துக்கள்

நயன்தாரா நடிப்பில் கோபி நயனார் இயக்கியுள்ள ‘அறம்’ திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி ரிலீசாகிறது. இதனை முன்னிட்டு இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடந்தது. அப்போது இயக்குனர் கோபி நயனார் பேசும்போது,

‘‘இந்த படத்தை இயக்குவதற்கு முன் எனக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டது. அந்த பிரச்சனை என்ன என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அந்த பிரச்சனையின்போது எனக்கு நிறைய பத்திரிகையாளர்கள் ஆதராவாக செயல்பட்டனர். அந்த பிரச்சனை காரணமாக சினிமாவிலுள்ள நிறைய பேருக்கு நான் அறிமுகமும் ஆனேன். இயக்குனர் சற்குணம் சார் அலுவலகத்திற்கு நான் அடிக்கடி போவேன். அப்படி ஒரு நாள் போனபோது அவரோட நண்பர் சௌந்தர் சார் எனக்கு அறிமுகமாக அவர் மூலம் இந்த படத்தை தயாரித்திருக்கும் ராஜேஷ் சாரிடம் அறிமுகமானேன்.

முதலில் அவர் ஒரு ஐந்து நிமிடம் இந்த கதையை கேட்டார். பிறகு என்னை நயன்தாரா மேடத்திடம் கதையை சொல்ல சொன்னார். நயன்தாரா மேடத்திடம் கதையை சொன்னேன். அவர் கதையை கேட்டதும், ‘இந்த கதையை நாம பண்றோம், வேலைகளை உடனே துவங்குகள்’ என்றார். நயன்தாரா மேடம் இந்த கதையில் நடிப்பதான தகவல் வெளியில் தெரிய வந்ததும் நிறைய பேர் இந்த கதை படமாகி வரக்கூடாது என்று வேலை செய்தார்கள். ஆனால் நயன்தாரா மேடம் இந்த கதையை படமாக பண்ணுவதில் ரொம்பவும் உறுதியாக இருந்தார். அப்படிதான் ராஜேஷ் சார் தயாரிப்பில், நயன்தாரா மேடம் நடிப்பில் இந்த படம் உருவானது.

இந்த படம் துவங்கிய நாளிலிருந்து இதுவரை நயன்தாரா மேடம் எனக்கு பக்க பலமாக இருந்து வருகிறார். இந்த படம் வெற்றிப் படமாக அமைகிறதோ, இல்லையோ நீங்கள் ஒரு இயக்குனராக ஜெயிக்க வேண்டும் என்று அவர் அடிக்கடி சொல்லுவார்! அப்படி படம் துவங்கிய நாளிலிருந்து இதுவரையிலும் அவர் எனக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வந்துள்ளார். எனக்கு பிரச்சனை வந்தபோது உதவிய பத்திரிகையாளர்களும், நயன்தாரா மேடமும் இல்லை என்றால் நான் இயக்குனராகி இருக்க மாட்டேன்’’ என்றார்!

கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ராஜேஷ் தயாரித்திருக்கும் இந்த படத்தில் நயன்தாராவுடன் சுனுலட்சுமி, ராம்ஸ், ரமேஷ், விக்னேஷ், தன்ஷிகா, வேலா ராமமூர்த்தி, ஜீவா ரவி, பழனி பட்டாளம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்ப்திவு செய்துள்ளார்.

#Aramm #Nayantara #GopiNainar #Ghibran #OmPrakash #PalaniPattalam #SunuLakshmi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காதல் கடல் தானா வீடியோ பாடல் - ராட்சசன்


;