அர்ஜுனுடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்!

அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சொல்லி விடவா’ பட டீஸரை இயக்கு ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடுகிறார்!

செய்திகள் 6-Nov-2017 2:25 PM IST VRC கருத்துக்கள்

அர்ஜுன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் ‘சொல்லி விடவா’. இந்த படத்தில் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் கதாநாயகியாக நடிக்க, கன்னட நடிகர் சந்தன் குமார் கதாநாயகனாக நடிக்கிறார். தமிழ், கன்னட மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் டீஸரை நாளை (7-11-17) மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். ஜாசி கிஃப்ட் இசை அமைக்கும் இந்த படம், ஐஸ்வர்யா அர்ஜுன் நடிப்பில் உருவாகும் இரண்டாவது படமாகும். விஷாலின் ‘பட்டத்து யானை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா அர்ஜுன். ‘சொல்லி விடவா’ படத்தை அர்ஜுனின் ஸ்ரீராம் ஃபிலிம் இண்டர்நேஷன் நிறுவனம் சார்பில் நிவேதிதா அர்ஜுன், அஞ்சனா அர்ஜுன் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Arjun #Sollividava #Murugadoss #AishwaryaArjun #SanthanaKumar Nivetharjun

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோலமாவு கோகிலா - கன் - இன் காதல் வீடியோ பாடல்


;