12 மாறுபட்ட தோற்றங்களில் அக்‌ஷய்குமார்!

‘2.0’ படத்தில் அக்‌ஷய்குமாரின் மாறுபட்ட 12 தோற்றங்கள்!

செய்திகள் 6-Nov-2017 12:36 PM IST VRC கருத்துக்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் முதலானோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ‘2.0’ படத்தின் இறுதிகட்ட வேலைகள் ஒரு பக்கம் நடந்து வர, இப்படம் குறித்த பல சுவராஸ்ய தகவல்களும் வெளியாகியவண்ணம் உள்ளன. இந்த படத்தில் ரஜினி, புரொஃபஸர் ‘போரா’வாகவும் ரோபோ ‘சிட்டி’யாகவும் நடிக்கிறார். ரஜினிக்கு மாறுபட்ட 2 கேரக்டர்கள் என்றால், அக்‌ஷய்குமார் இப்படத்தில் பல்வேறுவிதமான 12 கெட்-அப்களில் வருகிறாராம்! அக்‌ஷய்குமார் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங் வித்தியாசமாக வரவேண்டும் என்பதற்காக ஒலிப்பதிவாலர் ரசூல் பூக்குட்டி பல புதிய யுக்திகளை இப்படத்தில் கையாண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. ‘2.0’ ஜனவரி 25-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#AkshayKumar #Rajinikanth #Bora #Chitti #ResulPookutty #Shankar #AmyJackson #ARRahman #LycaProduction

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.0 ட்ரைலர்


;