சிம்பு, சந்தானத்துடன் இணைந்த ஹரிஷ் கல்யாண் !

சந்தானம் படத்திற்காக சிம்பு இசையில் பாடிய ஹரிஷ் கல்யாண்!

செய்திகள் 3-Nov-2017 12:40 PM IST VRC கருத்துக்கள்

சந்தானம், வைபவி சாண்டில்யா நடிக்கும் படம் ‘சக்க போடு போடு ராஜா’. ‘விடிவி’ கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் சேதுராம் இயக்குகிறார். இந்த படத்திற்கு சிம்பு இசை அமைக்கிறார். சமீபத்தில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஹரிஷ் கல்யாணும், சிம்புவும் சந்தித்திருக்கிறார்கள். அப்போது ஹரிஷ் கல்யாண் நன்றாக பாடக் கூடியவர் என்பது சிம்புவுக்கு தெரிய வர, சந்தானத்தின் ‘சக்க போடு போடு ராஜா’விற்கான டைட்டில் பாடலை ஹரிஷ் கல்யாணை பாட வைத்திருக்கிறார் சிம்பு. சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடந்து முடிந்த நிலையில், இப்போது இந்த படத்திற்காக ஹரிஷ் கல்யாணும் ஒரு பாடலை பாடியிருக்கிறார் என்பது ஒரு புதிய தகவலாகும்.

#STR #HarishKalyan #BiggBoss #SakkaPoduPoduRaja #Santhanam #Vaibhavi #HarishArmy

.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காற்றின் மொழி ட்ரைலர்


;