‘‘போலீஸ் மீதான மக்களின் எண்ணத்தை ‘தீரன்’ மாற்றும்!’’ - இயக்குனர் வினோத்

இன்று நடந்த ‘தீரன்’ பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் கார்த்தி மற்றும் இயக்குனர் வினோத் படம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்

செய்திகள் 2-Nov-2017 5:58 PM IST Chandru கருத்துக்கள்

‘தீரன்’ படத்தின் பாடல்கள் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குனர் வினோத், நடிகர் கார்த்தி, நடிகை ரகுல் ப்ரீத் சிங் உட்பட ‘தீரன்’ படழுக்குழுவினர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இவ்விழாவில் பேசிய இயக்குனர் வினோத், ‘‘காவல்துறை மீதான மக்களின் நெகடிவ் எண்ணங்களை ‘தீரன்’ படம் மாற்றும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள் ஒருசிலரும் இப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடவேண்டிய விஷயம். 1995லிருந்து 2005வரை நடைபெற்ற சில குற்றச் சம்பவங்களின் பின்னணியை வைத்து இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளோம். இப்படத்திற்காக 90களில் இருப்பதுபோன்ற படப்பிடிப்புத்தளங்களை தேடிக் கண்டுபிடிப்பது பெரிய சவாலான வேலையாக இருந்தது!’’ என்றார்.

நடிகர் கார்த்தி ‘தீரன்’ பற்றிய பேசியபோது, ‘‘தீரன் படத்தில் நடித்தபோது எனக்கு ஆயிரத்தில் ஒருவன் படம் ஞாபகத்தில் வந்துபோனது. படத்தின் முக்கிய சில காட்சிகளில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். டிரைலரைப் பார்த்தாலே உங்களுக்கு தெரியும்... நான் எவ்வளவு ஒடியிருக்கிறேன் என்று. வினோத்தின் ‘சதுரங்க வேட்டை’ படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர்கிட்ட இருக்கிற ஒரு ப்ளஸ் என்னனா, அவரோட படமா இருந்தாலும் அதை மூணாவது மனுசனா வெளியிலிருந்து பார்க்கிற பக்குவம் அவர்கிட்ட இருக்கு. அதுனாலதான், சரியா வரலைன்னு அவர் நினைச்ச விஷயங்கள நாங்க திரும்ப ஷூட் பண்ணிருக்கோம். எல்லோரும் இந்த படத்த ஒரு ‘ரா’ மெட்டீரியலா பார்க்கிறாங்க. ஆனா, அப்படியில்ல.... எல்லா கமர்ஷியல் விஷயங்களும் கலந்த படம்தான் ‘தீரன்’!’’ என்றார்.

படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசும்போது, ‘‘என்னோட மியூசிக் வேணும்னு கேட்டு வர்றவங்க எல்லோரும் அவார்டு படம் எடுக்கிற ஃபீல்லதான் வர்றாங்க. ஆனா, ‘தீரன்’ அப்படியில்ல.... இது ஒரு கம்ப்ளீட் பேக்கேஜ் ஆல்பம். 3 டூயட், ஒரு மெலடி, ஒரு ஹீரோவுக்கான சாங், ஒரு அயிட்டம் சாங்னு ஒரு கமர்ஷியல் ஆல்பம் பண்ண சான்ஸ் கொடுத்த இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் நான் நன்றி சொல்லிக்கிறேன்!’’ என்று கூறினார்.

#TheeranAdhigaaramOndru #Karthi #RakulPreet #Ghibran #HVinoth #DreamWarriorPictures #SRPrabhu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவ் டீஸர்


;