கொடிவீரன், திருட்டுப்பயலே 2 படங்களின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நவம்பர் இறுதியில் கொடிவீரன், திருட்டுப்பயலே 2 படங்களை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது

செய்திகள் 2-Nov-2017 2:48 PM IST Chandru கருத்துக்கள்

‘மெர்சல்’ படத்திற்குப் பிறகு வேறெந்த பெரிய படங்களும் வெளியாகாத சூழலில் இந்த நவம்பரிலும், வரவிருக்கும் டிசம்பரிலும் அடுத்தடுத்து பல படங்கள் ரிலீஸாவதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றன. நாளை விழித்திரு, அவள் திரைப்படங்கள் வெளிவருகின்றன. வரும் 17ஆம் தேதி கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தீரன்’ படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இம்மாதம் 30ஆம் சசிகுமாரின் ‘கொடிவீரன்’ படத்தையும், பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘திருட்டுப்பயலே 2’ படத்தையும் வெளியிடவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

‘குட்டிப்புலி’ படத்தைத் தொடர்ந்து முத்தையா இயக்கியிருக்கும் ‘கொடிவீரன்’ படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். வழக்கம்போல் பி அன் சி ஆடியன்ஸை குறிவைத்து ‘கொடிவீரன்’ படத்தை களமிறக்க உள்ளனர். அதேபோல், 2006ல் வெளிவந்து வெற்றிபெற்ற ‘திருட்டுப்பயலே’ படத்தின் இயக்குனர் சுசிகணேசன் இப்போது அதன் இரண்டாம்பாகத்தை பாபி சிம்ஹாவை நாயகனாக்கி இயக்கியுள்ளார். இப்படத்தில் அமலாபால் நாயகியாக நடித்துள்ளார். பிரசன்னா, விவேக், சனம் ஷெட்டி, ரோபோ ஷங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

#Thiruttuppayale2 #Prasanna #Kodiveeran #BobbySimha #AmalaPaul #Sasikumar #Muthaiah #KuttiPuli #SusiGanesan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவராட்டம் டீஸர்


;