‘கொடிவீரன்’ ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘கொடிவீரன்’ நவம்பர் 30-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 31-Oct-2017 11:52 AM IST VRC கருத்துக்கள்

’குட்டிப்புலி’, ‘கொம்பன்’ முதலான படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் சசிகுமார், மகிமா நம்பியார், பூர்ணா, சனுஷா முதலானோர் நடித்திருக்கும் படம் ‘கொடிவீரன்’. அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படத்தை தீபாவளி ரிலீசாக இம்மாதம் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருந்தனர். இந்நிலையில் ஒரு சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இப்போது ‘கொடிவீரன்’ படத்தை நவம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். சசிகுமார் நடிப்பில் இதற்கு முன் வெளியான ‘பலே வெள்ளையத் தேவா’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் இப்படம் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார் சசிகுமார்.

#Sasikumar #KodiVeeran #Muthaiah #Poorna #Sanusha #MahimaNambiar #CompanyProduction

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவராட்டம் டீஸர்


;