கௌதம் கார்த்திக்கின் ரிலீஸ் சாதனை!

விஜய்சேதுபதியை தொடர்ந்து கௌதம் கார்த்திக் நடிப்பிலும் 5 படங்கள்!

செய்திகள் 30-Oct-2017 6:10 PM IST VRC கருத்துக்கள்

கௌதம் கார்த்திக்கை பொறுத்தவரை இந்த ஆண்டு (2017) மறக்க முடியாத ஆண்டாக அமைந்துள்ளது. காரணம் நவம்பர் 24-ஆம் தேதி ரிலீஸ் குறித்துள்ள ‘இந்திரஜித்’ திரைப்படம் உட்பட கௌதம் கார்த்திக் நடிப்பில் 5 படங்கள இந்த வருடம் வெளியாகியுள்ளன. இந்த வருடத்தில் கௌதம் கார்த்திக்கின் முதல் படமாக ‘முத்துராமலிங்கம்’ வெளியானது. இரண்டாவது படமாக ‘ரங்கூன்’ திரைக்கு வந்தது. மூன்றாவது படமாக ‘இவன் தந்திரன்’ வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து நான்காவது படமாக ‘ஹரஹரமகாதேவதி’ வெளியானது. ஐந்தாவது படமாக நவம்பர் 24-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிப்பில் அவர் மகன் கலாபிரபு இயக்கியுள்ள ‘இந்திரஜித்’. தற்போதைய சூழ்நிலையில் ஒரு நடிகரை பொறுத்தவரையில் வருடத்திற்கு ஓரிரு படங்கள் வெளியானாலே அது பெரும் சாதனையாக கருதப்படுகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் இந்த வருடம் 5 திரைப்படங்கள் வெளியாகியிருப்பதை போல இந்த ஆண்டு கௌதம் கார்த்திக்கும், 5 திரைப்படங்கள் வழங்கி சாதனை புரிந்துள்ளார்..

#GauthamKarthick #Muthuramalingam #Rangoon #IvanThanthiran #HaraHaraMahaDevaki #Indrajith

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இருட்டு அறையில் முரட்டு குத்து - டீஸர்


;