பொங்கலுக்கு ரிலீஸாகிறதா வெங்கட்பிரபுவின் ‘பார்ட்டி’?

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் ‘பார்ட்டி’ திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன

செய்திகள் 30-Oct-2017 11:02 AM IST Top 10 கருத்துக்கள்

2018 பொங்கல் ரிலீஸை குறிவைத்து பல படங்களும் திட்டமிட்டு வருகின்றன. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தைத் தொடர்ந்து ஆர்.கே.சுரேஷின் ‘பில்லா பாண்டி’ திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீஸாகவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதோடு, விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகவில்லையென்றால், பொங்கலுக்கு ரிலீஸாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் ‘பார்ட்டி’ திரைப்படம் பொங்கல் ரிலீஸிற்கு திட்டமிட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஷாம், மிர்ச்சி சிவா, கயல் சந்திரன், சத்யராஜ், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா கெஸன்ட்ரா, சஞ்சித ஷெட்டி, நிவேதா பெத்துராஜ், நாசர், சம்பத் மற்றும் சுரேஷ் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் ‘பார்ட்டி’யில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் ‘பார்ட்டி’ ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

#Party #VenkatPrabhu #Jai #Shaam #Shiva #Chandran #Sathyaraj #Jayaram #RamyaKrishnan #ReginaCassandra #SanchitaShetty #NivethaPethuraj #Nassar #Sampath #Suresh #YuvanShankarRaja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நீயா 2 - ட்ரைலர்


;