ஜனவரியில் ஷூட்டிங், தீபாவளிக்கு ரிலீஸ் : சூர்யா - செல்வராகவன் கூட்டணி!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

செய்திகள் 30-Oct-2017 10:36 AM IST Top 10 கருத்துக்கள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் 2018 பொங்கலுக்கு ரிலீஸாவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சூர்யா நடிக்கவிருக்கும் 36வது படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இப்படத்தை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் முதல் படம் இதுதான் என்பது மட்டுமல்லாமல், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் இது சூர்யாவுடன் முதல் கூட்டணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பே வந்துவிட்டாலும், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் துவங்கவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அதோடு, படத்தை தீபவாளி 2018ல் ரிலீஸ் செய்யவிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். படத்தின் நாயகி, மற்ற நட்சத்திரங்கள், டெக்னீஷியன்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#Suriya36 #Selvaraghavan #DreamWarriorPictures #ThaanaSerndhaKootam #VigneshSivan #Anirudh #TSK

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூர்யா 36 படத்துவக்கம் - வீடியோ


;