ரிலீஸ் தள்ளுகிறதா ரஜினி - ஷங்கரின் ‘.2.0’?

‘2.0’ ரிலீஸ் மாற்றம் குறித்து வெளியாகும் செய்திகள் பற்றி லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் விளக்கம்

செய்திகள் 30-Oct-2017 10:12 AM IST Top 10 கருத்துக்கள்

ஸ்கை டைவிங் மூலம் ‘2.0’வை புரொமோட் செய்தது, துபாயிலுள்ள உலகின் உயர்ந்த கட்டிடத்தில் ஆடியோ விழாவை நடத்தியது என உலகம் மொத்தத்தையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது ரஜினி & ஷங்கர் & லைக்கா புரொடக்ஷன் கூட்டணி. லிரிக்கல் வீடியோ யு டியூபில் வெளியிடுவதற்கு முன்பே, ‘2.0’ படத்தின் இரண்டு பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டாகியிருக்கிறது. இதனால் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் திடீரென ‘2.0’ படத்தின் ரிலீஸ் தேதி மாறியுள்ளதாக இணையதளங்களில் செய்தி பரவியது.

ஜனவரி 26ஆம் அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாட்மேன்’ என்ற பாலிவுட் படம் ரிலீஸாகவிருப்பதால், அதற்கு முந்தைய தினம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘2.0’ படத்தின் ரிலீஸை ஏப்ரல் 2018க்கு தள்ளி வைத்துள்ளதாக வதந்தி கிளம்பியது. ஆனால், இந்த செய்தி மறுத்துள்ள லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இது தேவையில்லாத வதந்தி என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளனர். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

#2point0 #Rajnikanth #AkshayKumar #AmyJackson #Shankar #ARRahman #Superstar #ARR

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீ யாழினி வீடியோ பாடல் - ராஜா ரங்குஸ்கி


;