டிசம்பரிலிருந்து ராஜீவ் மேனனின் ‘சர்வம் தாள மயம்’

ராஜீவ் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் இணையும் சர்வம் தாளமயம் படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் துவங்குகிறது

செய்திகள் 28-Oct-2017 5:49 PM IST VRC கருத்துக்கள்

‘மின்சாரக்கனவு’, ‘ கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ ஆகிய படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் அடுத்து இயக்கும் படம் ‘சர்வம் தாள மயம்’. கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு ராஜீவ் மேனன் இயக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார் என்றும், இந்த படத்திற்கு ராஜீவ் மேனன் இயக்கிய படங்களுக்கு இசை அமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார் என்றும் தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். அத்துடன் இந்த படம் மியூசிக்கை மையப்படுத்தி எடுக்கப்படும் படம் என்றும் இந்த படத்தில் 9 பாடல்கள் இடம்பெறவிருக்கிறது என்ற தகவலும் வெளியாகியிருந்தது. இப்போது இந்த படத்தின் புதிய தகவலாக இப்படத்தின் படப்பிடிப்பை டிசம்பர் மாதம் துவங்கவிருக்கிறது என்பதை ராஜீவ் மேனன் தெரிவித்துள்ளார். ‘மெர்சல்’, ‘2.0’ ஆகிய படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கும் இந்த படம் இசை பிரியர்களுக்கு ஏற்ற படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

#RajeevMenon #MinsaraKanavu #KandukondeinKandukondein #SarvamThaalamMayam #GVPrakash #Mersal #ARRahman

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஐங்கரன் டீஸர்


;