’2.0’வில் எல்லோருக்கும் சவாலான பணி! - இயக்குனர் ஷங்கர்

2.0 ஆடியோ வெளியீட்டு விழாவில் ஷங்கர் பேசியதன் விவரம்!

செய்திகள் 28-Oct-2017 2:02 PM IST VRC கருத்துக்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், எமி ஜாக்‌சன் முதலானோர் நடித்திருக்கும் ‘2.0’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று துபாயில் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் ஷங்கர் பேசியதன் விவரம் வருமாறு:

‘‘ஒரு இந்திய படத்திற்கு 350 கோடி வரை செலவு செய்ய யாருமே தயாராக இருக்க மாட்டார்கள். ஆனால் ‘லைகா’ சுபாஷ்கரன் இந்த கதையை கேட்டு பிடித்ததினாலும், அவருக்கு தமிழ் சினிமா மீதுள்ள காதலாலும் இந்த படத்தை தயாரிக்க முன் வந்தார். அதற்கு அவருக்கு நன்றி!
’2.0’ எந்திரன் படத்தின் தொடர்ச்சி அல்ல. இது முற்றிலும் மாறுபட்ட கதைக்களம். ‘2.0’ படத்தில் உலகாளவிய ஒரு கருத்தை சொல்லியிருக்கிறேன். நமக்கு பரிச்சயமான டாக்டர் வசீகரன், சிட்டி போன்றவர்கள் எல்லாம் இக்கதையில் வருவார்கள். இப்படி நடந்தால் எப்படி இருக்கும்? என்ற கற்பனையே 2.0. அந்த கற்பனை என்னை எங்கெல்லாம் அழைத்து கொண்டு போனதோ அங்கெல்லாம் பயணித்திருக்கிறேன்.

மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டிருக்கும்போது கூட டெல்லியில் 47 டிகிரி வெயிலில் கிட்டத்தட்ட 12 கிலோ எடையுள்ள உடையை அணிந்துகொண்டு நடித்து கொடுத்த ரஜினி சாருக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். ‘பேட்மேன்’, ‘சூப்பர் மேன்’ மாதிரியான உடை அது. இந்திய சினிமாவில் அந்த மாதிரி உடை வந்ததில்லை.

அக்‌ஷய் குமாரை பற்றி சொல்ல வேண்டுமானால் ஒரு நாள் கூட சாதாரணமாக வந்தோமா, மேக்கப் போட்டோமா, நடித்தோமா என்பது ‌ கிடையாது. தினமும் 4 மணி நேரம் மேக்கப் போட வேண்டும். அதற்கு மேல் எடை அதிகமான உடையை போட்டுக்கொண்டு வெயிலில் நடிக்க வேண்டும். அவர் இதுவரை நடித்த படங்களின் கஷ்டத்தை ஒரே படத்தில் பட்டிருக்கிறார். அதை படத்தை பார்க்கும்போது எல்லோரும் உணர்வீர்கள்.

படத்தில் 3 பாடல்கள் என்றாலும் அதற்காக ஏ.ஆர்.ரஹ்மான் கடுமையாக உழைத்திருக்கிறார். பாடல்கள் மட்டும் இல்லாமல் அவருக்கு பின்னணி இசையில் நிறைய பணிகள், சவால்கள் இருக்கின்றன. அதைப் போலதான் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, ஒலிப்பதிவாலர் ரசூல் பூக்குட்டி எல்லோருக்கும் ’2.0’ல் சவாலான பணிகள் இருக்கின்றன’’ என்றார்.

#2PointO #Rajinikanth #AkshayKumar #AmyJackson #Shankar #ARRahman #LycaProduction #Antony #NiravShah #2PointOMusicReview

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.0 ட்ரைலர்


;