சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷுக்கு இது முதல் கிறிஸ்துமஸ்!

சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரனு’டன் களமிறங்கும் ஜி.வி.பிரகாஷின்  ‘குப்பத்து ராஜா’

செய்திகள் 27-Oct-2017 11:28 AM IST VRC கருத்துக்கள்

நடன இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்குனர் அவதாரம் எடுத்து இயக்கியிருக்கும் படம் ‘குப்பத்துராஜா’. ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து இப்போது இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் தனுஷ் வெளியிட்டார். பாலக் லால்வானி என்ற புதுமுகம் கதாநாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தில் பார்த்திபன், பூனம் பஜ்வா ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இப்படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் மாதம் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் முதலானோர் நடிப்பில் உருவாகி வரும் ‘வேலைக்காரன்’ திரைப்படமும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதுவரை சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ் நடித்த படங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியானதில்லை. இந்த வருட கிறிஸ்துமஸுக்கு இவர்கள் நடித்த படங்கள் வெளியாகவிருப்பதால் இது அவர்களை பொறுத்தவரையில் முதல் ஸ்பெஷல் கிறிஸ்துமஸ் பண்டிகையாக திகழப் போகிறது.

#KuppathuRaja #GVPrakash #Parthipean #BabaBhaskar #MaheshMuthuswami #PoonamBajwa

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சர்வம் தாள மயம் டீஸர்


;