விஜய் திடீர் அறிக்கை!

‘மெர்சல்’ படத்தை வெற்றிபெற செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த விஜய்!

செய்திகள் 25-Oct-2017 4:06 PM IST VRC கருத்துக்கள்

அட்லி இயக்கத்தில், விஜய் நடித்து தீபாவளியன்று வெளியான படம் ‘மெர்சல்’. ஒரு சில சர்ச்சைகளை ஏற்படுத்திய இப்படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து நடிகர் விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம வருமாறு”

‘மெர்சல்’ திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகி மக்களின் பாராட்டுக்களுடன் நல்ல வரவேற்பைப் பெற்று மிகப் பெரிய வெற்றிப் படமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மாபெரும் வெற்றியடைந்துள்ள ‘மெரசல்’ திரைப்படத்திற்கு சில எதிர்ப்புகளும் வந்தன. இதற்கு பதில் அளிக்கும் வகையில் என கலையுலகை சேர்ந்த நண்பர்களான நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், திரையுலக அமைப்புகளான தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், மற்றும் தேசிய அளவில் பிரபலமான அரசியல் தலைவர்கள், மாநில கட்சிகளின் தலைவர்கள், கட்சி பிரதிநிதிகள், பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதளம், பண்பலையை சேர்ந்த ஊடக நண்பர்கள், எனது நண்பா, நண்பிகள் (ரசிகர்கக்ள், ரசிகைகள்), பொதுமக்கள் அனைவரும் எனக்கும், ‘மெர்சல்’ படக்குழுவினருக்கும் மிகப் பெரிய ஆதரவு தந்தார்கள். மேலும் ‘மெர்சல்’ திரைப்படத்தை மாபெரும் வெற்றிபெற செய்ததற்கும் ஆதரவு கொடுத்ததற்கும், அனைவருக்கும் இத்தருணத்தில் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார் விஜய்.

#Vijay #Mersal #SriThenandalFilms #Samantha #KajalAgarwal #Atlee #ARRahman #NithyaMenen

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;