தனுஷ், விஜய்சேதுபதிக்கு அடுத்து சந்தீப்!

தனுஷ், விஜய்சேதுபதிக்கு அடுத்து சந்தீப் B&C நாயகனாக வருவார்!

செய்திகள் 24-Oct-2017 10:47 AM IST VRC கருத்துக்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப், விக்ராந்த், மெஹ்ரின் முதலானோர் நடித்துள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இவ்விழால் கலந்துகொண்ட நடிகர் விஷால் பேசும்போது,

‘‘இயக்குனர் சுசீந்திரன் பட விழாக்களில் கலந்துகொள்வது என்னுடைய சொந்த படத்தின் விழாவில் கலந்துகொளவது போன்றது. இந்த படத்தில் நடித்திருக்கும் சந்தீப், விக்ராந்த் இருவரும் எனக்கு தம்பிகள் போல! இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் மெஹ்ரின் என்னுடன் ‘தம்ப்ஸ் அப்’ விளம்பரத்தில் நடித்துள்ளார். அவர் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்த திரைப்படம் இவர்கள் அனைவரையும் அடுத்த இடத்துக்கு அழைத்து செல்லும்.

தயாரிப்பாளர்கள் அனைவரும் டிஜிட்டல் ப்ளாட்ஃபார்மில் படத்தை வெளிட்யிடுவதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்பதை தெரிந்துகொண்டு அவர்கள் தங்களுடனை படங்களை டிஜிட்டல் ப்ளாட்ஃபார்மில் வெளியிட முன்வர வேண்டும். சாட்டிலைட் உரிமை இன்று அதிகமாக விற்பனையாவது இல்லை. அதனால டிஜிட்டலில் படத்தை வெளியிட தயாராக உள்ள நிறுவனங்கள தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி அதை பற்றிய தகவலை தெரிந்துகொண்டு தங்களது படங்களை டிஜிட்டலில் வெளியிடலாம். ‘துப்பறிவாளன்’ மற்றும் ‘மகளிர் மட்டும்‘ டிஜிட்டலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள்து’’ என்றார்.

இயக்குனர் சுசீந்திரன் பேசும்போது, ‘‘சந்தீப் கிஷன் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவருடன் நான் ‘ஜீவா’ படத்திலேயே இணைந்திருக்க வேண்டும். ‘ஜீவா’ திரைப்படத்தை முதலில் தமிழில் விஷ்ணு விஷாலை வைத்தும், தெலுங்கில் சந்தீபை வைத்தும் ஒரே நேரத்தில் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து ஆரம்பித்தேன். ஆனால் அதுக்கு கடுமையான உழைப்பு தேவைப்பட்டது. இரண்டு நாள் படப்பிடிப்புக்கு பின் தான் இரண்டு மொழிகளிலும் வெவ்வேறு ஹீரோவை வைத்து படமெடுப்பது கடினம் என்பது எனக்கு தெரிந்தது. அதனை தொடர்ந்து இப்போது சந்தீபுடன் இணைந்துள்ளேன். தனுஷ் மற்றும் விஜய்சேதுபதிக்கு பிறகு பி மற்றும் சி செண்டர் நாயகனாக சந்தீப் வருவார். ஒரு நடிகன் எளிதாக வசனங்களை பேசி விடலாம். ஆனால் சந்தீப் நடிப்பின் மூலமாக அனைவரையும் ஹோல்ட் செய்கிறார். அவருடைய நடிப்புக்கு நீச்சயம் நல்ல பெயர் கிடைக்கும்’’ என்றார்.

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ நவம்பர் 10-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

#NenjilThunivirundhal #Vikranth #SundeepKishan #MehreenPirzada #Sussendiran #Soori #Dhanush

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சண்டகாரி வீடியோ பாடல் - கடைக்குட்டி சிங்கம்


;