பவர் ஸ்டாரை தொடர்ந்து ஜுனியர் என்.டி.ஆர்!

பவன் கல்யாண படத்தை தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆர். படத்திற்கு இசை அமைக்கும் அனிருத்!

செய்திகள் 23-Oct-2017 3:14 PM IST VRC கருத்துக்கள்

ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘ஜெய் லவ குசா’. இந்த படத்தை தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆர்.நடிக்கும் அவரது 28-ஆவது படத்தை திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்குகிறார். இந்த படத்தின் பூஜை இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த பூஜையில் தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டாரான பவன் கலயாண் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழித்தியுள்ளனர். திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்துள்ள அவரது 25-ஆவது படம் இன்னும் வெளியாகவில்லை. இன்னும் பெயரிடப்படாத இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆரை வைத்து திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கும் படத்திற்கும் அனிருத் தான் இசை அமைப்பாளர். இன்று நடந்த இப்படத்தின் பூஜையில் இசை அமைப்பாளர் அனிருத்தும் கலந்துகொண்டுள்ளார். தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் அனிருத் தனது முத்திரை அழுத்தமாக பதிக்கவிருக்கிறார்.

#Anirudh #PwanKalyan #JrNTR #TrivikarmSrinivas #PowerStart #PSPK #Vivegam #Vedalam #tollywood

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

யூ டர்ன் கர்மா தீம் - வீடியோ


;