‘மெர்சலு’க்கு 5-ஆவது நாளில் சிறப்பு காட்சி!

’மெர்சல்’ வெளியாகிய ஐந்தாவது நாளிலும் சிறப்பு காட்சி!

செய்திகள் 21-Oct-2017 5:03 PM IST VRC கருத்துக்கள்

வழக்கமாக பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் வெளியாகும் நாட்களில் அதிகாலையில் சிறப்பு காட்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் தீபாவளியன்று வெளியாகிய விஜய்யின் ‘மெர்சல்’ அன்றைய தினம் சிறப்பு காட்சிகள் நடைபெற்றதோடு படம் வெளியாகி 5-ஆவது நாளிலும் சிறப்பு காட்சி நடைபெறவிருக்கிறது. சென்னை குரோம்பேட்டையிலுள்ள வெற்றி திரையரங்க வளாகத்தில் வெற்றி, ராகேஷ் என 2 திரையரக்குகள் இருக்கின்றன. இந்த இரண்டு திரையரங்குகளிலும் நாளை (22-10-17) காலை 4.45 மணி அளவில் இரண்டு சிறப்பு காட்சிகள் நடைபெறவிருக்கிறது. ஒரு படம் வெளியாகி ஐந்து நாட்கள் ஆன நிலையில் சிறப்பு காட்சிகள் நடைபெறுவது சமீபகாலத்தில் நடந்ததில்லை என்று கூறப்படுகிறது.

#Vijay #Mersal #SJSuriya #Samantha #Kajal #Vadivelu #Atlee #SriThenandalFilms #ARRahman #NithyaMenen

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

லைப் ஆப் ராம் வீடியோ பாடல் - 96


;