‘சங்கமித்ரா’வில் ‘எம்.எஸ்.தோனி’ ஹீரோயின்!

சுந்தர்.சி. இயக்கும் ‘சங்கமித்ரா’வுக்கு ‘எம்.எஸ்.தோனி’ பட ஹீரோயின் தேர்வு!

செய்திகள் 21-Oct-2017 4:21 PM IST VRC கருத்துக்கள்

ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பு ‘சங்கமித்ரா’. சுந்தர்.சி.இயக்கும் இந்த படத்தில் ஆர்யா, ‘ஜெயம்’ ரவி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். படத்தின் டைட்டில் கேரக்டரான ‘சங்கமித்ரா’வில் நடிக்க முதலில் ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் ஒரு சில காரணங்களால் ஸ்ருதி ஹாசன் இப்படத்திலிருந்து விலகினார். அதனை தொடர்ந்து ‘சங்கமித்ரா’ கேரக்டருக்கு ஹன்சிகா பெயர் அடிப்பட்டது. அதன் பிறகு ஹன்சிகாவும் நடிக்கவில்லை என்ற தகவல் வெளியானது. இப்போது சங்கமித்ரா கேரக்டருக்கான கதாநாயகி முடிவாகியுள்ளது. அவர் பாலிவுட் நடிகை திஷா படானி. M.S. Dhoni: The Untold Story படத்தில் நடித்த திஷா படானி வேறு சில ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சங்கமித்ரா படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இது குறித்த தகவலை ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தை சேர்ந்த ஹேமா ருக்மணி ட்வீட் செய்துள்ளார். ஏ.அர்.ரஹ்மான் இசை அமைக்கும் ‘சங்கமித்ரா’வின் படபிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

#Sangamithra #SriThenandalFilms #DishaPatani #SundarC #ARRahman #MSDhoni #JayamRavi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செக்க சிவந்த வானம் ட்ரைலர்


;