‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திற்கு முதல் வெற்றி!

பெரிய தொகைக்கு விற்பனையான  கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’

செய்திகள் 20-Oct-2017 4:17 PM IST VRC கருத்துக்கள்

‘சதுரங்கவேட்டை’ படப் புகழ் வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சில நிஜ சம்பவங்களை மையமாக வைத்து அதிரடி ஆக்‌ஷன் படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் அடுத்த மாதம் (நவம்பர்) 17-ஆம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரு மடங்காக்கி உள்ள நிலையில் இப்படத்தின் வியாபார விஷயங்களும் சூடு பிடித்துள்ளது. முதன் முதலாக இந்த படத்தின் திருநெல்வேலி, கன்னியாகுமாரி விநியோக உரிமை விற்கபட்டுள்ளது. இந்த ஏரியா விநியோக உரிமையை ‘ஸ்ரீராஜ் ஃபிலிம்ஸ்’ சுப்புராஜ் வாங்கியுள்ளார். இதுவரை கார்த்தி நடித்து வெளியாகிய படங்களை விட இந்த படம் பெரும் தொகைக்கு வாங்கப்பட்டுள்ளது. ’தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் கார்த்தியுடன் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்க, ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

#TheeranAdhigaramOndru #Karthi #RakulPreetSingh #Vinoth #Ghibran #SathyanSooryan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வரேன் வரேன் வீடியோ பாடல் - சீமராஜா


;