கௌதம் வாசுதேவ் மேனன் பட இசை அமைப்பாளர் அதிகாரபூர்வ அறிவிப்பு!

’எனை  நோக்கி பாயும் தோட்டா’விற்கு தர்புகா சிவா இசை அமைக்கிறார்! – கௌதம் வாசுதேவ் மேனன் அதிகாரபூர்வ அறிவிப்பு!

செய்திகள் 20-Oct-2017 12:16 PM IST VRC கருத்துக்கள்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வரும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. தனுஷ், மேகா ஆகாஷ் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு யார் இசை அமைக்கிறார் என்பதை மிகவும் ரகசியமாக வைத்திருந்தார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். இத்தனைக்கும் இந்த படத்தில் இடம்பெறும் ‘மறுவார்த்தை பேசாதே…’ சிங்கிள் டிராக்கை வெளியிட்டு, அந்த பாடல் எழுதியவர் தாமரை, பாடியவர் சித்ஸ்ரீராம் என பெயரைக் குறிப்பிட்டு இசை அமைப்பாளர் பெயரை மிஸ்டர் எக்ஸ் என்று குறிப்பிட்டிருந்தார்கள். இந்த பாடல் ரசிகர்களிடம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் இப்பாடலுக்கு இசை அமைத்தவர் யார் என்பது ரசிகர்களிடம் பெரும் கேள்வியாக இருந்து வந்தது. இந்நிலையில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்திற்கு இசை அமைப்பவர் தர்புக சிவா என்ற தகவலை நமது இணையதளத்தில் கடந்த ஃபிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி செய்தியாக வெளியிட்டிருந்தோம். அந்த செய்தி வெளியாகி கிட்டத்தட்ட 8 மாதங்கள் கடந்த நிலையில் இப்போது ‘எனை நோக்கி பாயும் தோட்டா’விற்கு இசை அமைப்பவர் தர்புக சிவா என்பதை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே சசிகுமார் நடிப்பில் ‘கிடாரி’, ‘பலே வெள்ளையத் தேவா’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்த தர்புகா சிவா இசை அமைக்கும் மூறாவது படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தவிர தர்புகா சிவா கை வசம் இப்போது ’பொன் ஒன்று கண்டேன்’ என்ற படமும் உள்ளது.

https://top10cinema.com/article/tl/41369/enai-noki-paayum-thotta-music-director

#Gauthammenon #EnaiNokkiPayumThotta #Dhanush #DarbukaSiva #MeghaAkash #ENPT

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பக்கிரி - ட்ரைலர்


;