ஜி.வி.பிரகாஷுடன் இணைந்த தனுஷ்!

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘குப்பத்துராஜா’ ஃபர்ஸ்ட் லுக்கை தனுஷ் வெளியிட்டார்!

செய்திகள் 20-Oct-2017 11:34 AM IST VRC கருத்துக்கள்

தனுஷ், ஜி.வி.பிரகாஷ் இருவரும் இதுவரை எந்த படத்திலும் இணைந்ததில்லை. அந்த குறையை ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘குப்பத்துராஜா’ தீர்த்து வைத்துள்ளது. நடன இயக்குனர் பாபா சங்கர், இயக்குனர் அவதாரம் எடுத்து இயக்கியுள்ள ‘குப்பத்துராஜா’வின் ஃபர்ஸ்ட் லுக்கை நேற்று மாலை தனுஷ் வெளியிட்டார். ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஒரு படத்தில் தனுஷ் இணைவது இதுதான் முதல் முறை! பாலக் லால்வானி என்ற புதுமுகம் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் பார்த்திபன், பூனம் பஜ்வா ஆகியோரும் நடிக்கிறார்கள். இசைக்கு ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவுக்கு மகேஷ் முத்துசாமி என கூட்டணி அமைந்துள்ள இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Dhanush #GVPrakash #KuppathuRaja #BabaBhaskar #Parthiepan #PoonamBajwa #MaheshMuthuswami

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

100 % காதல் டீஸர்


;