சென்னையில் ஒரு நாள் 2 - விமர்சனம்

சொல்ல வந்த கதையை கமர்ஷியல் விஷயங்களுக்கு பலிகொடுக்காம எடுக்க முயற்சி பண்ணிருக்கிற இயக்குனர பாராட்டலாம்

விமர்சனம் 19-Oct-2017 11:37 AM IST Top 10 கருத்துக்கள்

Direction : JPR
Production : Kalpataru Pictures
Starring : R. Sarathkumar, Ajay, Napoleon, Suhashini, Muishkanth
Music : Jakes Bejoy
Cinematography : Vijay Deepak
Editing : Gopi Krishna

முதல் பாகத்தோட தொடர்ச்சியான கதையைத்தான் இந்த ரெண்டாம் பாகத்துல படமாக்கியிருக்காங்களா?

அந்தப் படத்தோட கதைக்கும் ‘சென்னை ஒரு நாள் 2’ கதைக்கும் எந்த சம்பந்தமுமில்ல! முதல் பாகத்துல ஒருவர் உயிரை காப்பாத்த இன்னொருவரோட உடல் உறுப்பை சென்னைக்கு எடுத்து வர்ற கதையை விறுவிறுப்பா சொல்லியிருந்தாங்க! ஆனா இப்படத்துல போலீஸுக்கு சவால் விடுகிற மாதிரி ஒரு பழிவாங்கல் கதையை சொல்லியிருக்காங்க! முதல் பாகமான ‘சென்னையில் ஒரு நாள்’ வெற்றிப் படமா அமைஞ்சதால ஒரு எதிர்பார்ப்புக்காக இப்படத்துக்கு அந்த தலைப்பை வைச்சிருக்காங்க. மத்தபடி எந்த தொடர்பும் இல்ல!

‘க்ரைம் கதை மன்னன்’ ராஜேஷ்குமாரோட கதையை வச்சு இப்படத்தோட திரைக்கதையை அமைச்சிருக்குறதா சொல்லிங்காங்களே... என்ன மாதிரியான கதை?

படத்தோட தலைப்புல என்னமோ சென்னைதான் இருக்கு... ஆனா, படம் நகர்ற கதைக்களம் பெரும்பாலும் கோயம்புத்தூர்தான். இது ஏன்னு தெரியலை! போலீஸ் அதிகாரி சரத்குமார் சென்னையிலிருந்து டிரான்ஸ்ஃபர் ஆகி கோயம்புத்தூர்க்கு வர்றார். ஒரு நாள் ‘ஏஞ்சலின் மரணம் இன்றா நாளையா?’ என்ற போஸ்டர்கள் கோயம்புத்துர் முழுக்க தென்படுகின்றன. இந்த சுவரொட்டி விஷயம் போலீஸ் கவனத்துக்கு வர, அத டீல் பண்ற பொறுப்பு சரத்குமாருக்கு வருது. இதுனால சரத்குமாருக்கும் அவரோட ஃபேமிலிருக்கும் சில மிரட்டல்கள் வர, அதனைத் தொடர்ந்து நடக்கும் பல திடுக்கிடும் சம்பவங்கள், திருப்பங்கள் தான் ‘கோயம்பத்தூரில் ஒரு நாள்’ மன்னிக்கவும் ‘சென்னையில் ஒரு நாள் -2’ படத்தோட கதைக்களம்!

ராஜேஷ்குமாரோட கதைக்கு போலீஸ் சரத்குமார் எந்தளவுக்கு செட்டாகியிருக்கார்?

இந்த படத்தை ஓர் இரவுல நடக்குற மாதிரி திரைக்கதை அமைச்சு இயக்கியிருக்கார் அறிமுக இயக்குனரான ஜே.பி.ஆர். ரெண்டு மணி நேரத்துக்கும் குறைவா ஓடுகிற படம்னாலும் திரைக்கதை விறுவிறுப்பா இல்லாததால பெரிய படத்தை பார்க்கிற சோர்வு வர்றதை தவிர்க்க முடியல. இருந்தாலும் த்ரில்லர் படங்களுக்கே உரிய சின்ன சின்ன சர்ப்ரைஸும், ட்விஸ்ட்டும் இல்லாமலும் இல்லை! படத்தோட ரெண்டாவது பாதில மர்ம போஸ்டர் யாரு ஒட்டினா? எதுக்காக அப்படி பண்ணாங்க? சரத்குமார மிரட்ட வேண்டிய அவசியமென்ன? இதுமாதிரி கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிய வரும்போது படம் கொஞ்சம் சுவாரஸ்யமா போகுது. வழக்கமாக சரத்குமார் படம்னா அதிரடி ஆக்ஷன், சண்டை காட்சிகள் இருக்கும்னு நம்பி வர்ற ரசிகர்களுக்கு இப்படம் கொஞ்சம் ஏமாற்றத்தைதான் தரும். ஆனா வித்தியாசமான ஒரு முயற்சியை சரத்குமார் கையாண்டிருக்கார்னு சொல்லலாம். ஒரு புத்திசாலியான புலனாய்வு போலீஸ் அதிகாரியை அப்படியே நம்ம கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்தியிருக்கார். மத்தபதி சென்டிமெண்ட் காட்சிகள்கூட ஓரளவுக்கு ஒர்க்அவுட்டாகியிருக்குனு சொல்லாம்.

வேறு யார்லாம் இந்தப்படத்துல நடிச்சிருக்காங்க... அவங்களுக்க என்ன மாதிரியான ரோல்?

சரத்குமாரோட மேலதிகாரியா ஒருசில காட்சிகள்ல வர்ற நெப்போலியன், மனநோயாளிகள் காப்பக மேலாளரா வர்ற சுஹாசினி, சரத்குமார்கூட இன்டிவெஸ்டிகேஷன் பண்ற போலீஸ் அதிகாரியா வர்ற முனிஸ்காந்த்னு எல்லோருமே பாராட்டும்படி நடிச்சிருக்காங்க.

படத்தோட டெக்னிக்கல் விஷயங்கள் எப்படி?

‘தாக்க தாக்க’, ‘துருவங்கள் பதினாறு’ படங்களுக்கு மியூசிக் பண்ண ஜேக்ஸ் பிஜாயோட பின்னணி இசை படத்துக்கு ப்ளஸ்ஸாக அமைஞ்சிருக்கு. ஆனா, படத்துல பாடல்கள் எதுவும் கிடையாது. அதேமாதிரி ஒரு நைட்ல நடக்குற இந்த கதையில தீபக் விஜய்யோட ஒளிப்பதிவும் கவனிக்க வைக்குது. எடிட்டிங் இன்னும் கொஞ்சம் சிறப்பா பணியாற்றியிருக்கலாம்.

எல்லாம் ஓகே... குடும்பத்தோட இந்த தீபாவளியை கொண்டாடுற படமா இத எடுத்துக்க முடியுமா?

க்ரைம் த்ரில்லர் படங்கள ரசிக்கிறவங்களுக்கு இந்தப்படம் பிடிக்க வாய்ப்பிருக்கு. காதல், காமெடி, பாடல்கள், அதிரடி சண்டை காட்சிகள்னு கமர்ஷியல் விஷயங்கள் ரொம்ப கம்மியா இருக்கிறதால குழந்தைகளுக்கும், சீரியல் பார்க்கிற பெண்களுக்கும் இந்தப் படம் பிடிக்குமாங்கிறது சந்தேகம்தான். இருந்தாலும் சொல்ல வந்த கதையை கமர்ஷியல் விஷயங்களுக்கு பலிகொடுக்காம எடுக்க முயற்சி பண்ணிருக்கிற இயக்குனர பாராட்டலாம்.

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

அடுத்த பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஓடுற நரி வீடியோ பாடல் - எச்சரிக்கை


;