சமூக வலைதளங்களில் வைரலாகும் சூர்யாவின் ‘சொடக்கு....’

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ‘சொடக்கு...’ பாடல் டீஸர் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

செய்திகள் 16-Oct-2017 10:50 AM IST Chandru கருத்துக்கள்

இதுபோல் அதிரடியாக டான்ஸ் ஆடிய சூர்யாவை ரசிகர்கள் கண்டுகளித்து எவ்வளவு நாட்கள் ஆயிற்று. ஒட்டுமொத்தமாக சேர்த்து வைத்து ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் சூர்யாவை குத்து டான்ஸ் ஆட வைத்திருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது நேற்று வெளியிடப்பட்ட ‘சொடக்கு...’ பாடல் டீஸர். இப்பாடல் குறித்த எதிர்பார்ப்பு சில மாதங்களுக்கு முன்பே எழுந்தது. காரணம்... இப்பாடலுக்கான படப்பிடிப்பு காட்சிகளை சிலர் திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்றியிருந்தது பரபரப்பை கிளப்பியது.

அனிருத் இசையமைப்பில் ஆண்டனிதாசன் பாடியுள்ள இப்பாடலை வரும் அக்டோபர் 16ஆம் தேதி வெளியிட உள்ளார்கள். இன்று அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு, இப்பாடலின் டீஸரை நள்ளிரவு 12.01க்கு வெளியிட்டார்கள். டாங்காமாரி, ஆலுமா டோலுமா, கருத்தவன்லாம் கலீசாம் வரிசையில் இந்த ‘சொடக்கு...’ பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

#ThaanaaSerndhaKoottam #Suriya #VigneshSivan #Anirudh #Sodakku #AnthonyDasan #TSK

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

யூ டர்ன் கர்மா தீம் - வீடியோ


;