சிவகார்த்திகேயனின் புதிய முடிவு!

வருடத்திற்கு இரண்டு படங்கள்! சிவகார்த்திகேயன் புதிய முடிவு!

செய்திகள் 14-Oct-2017 10:43 AM IST VRC கருத்துக்கள்

சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ படம் சென்ற ஆண்டு அக்டோபர் மாத்ம் 7-ஆம் தேதி வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து சிவர்கார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘வேலைக்காரன்’ ஆயுதபூஜை வெளியீடாக வருவதாக இருந்தது. ஆனால் பட வேலைகள் திட்டமிட்டபடி முடிவடையாததால் இப்படத்தின் ரிலீஸை டிசம்பர் 22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். ‘ரெமோ’ வெளியாகி ஒரு வருடம் கடந்த நிலையில் நேற்று மாலை சிவகார்த்திகேயன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது,
‘‘என்னுடைய படம் வெளியாகி ஒரு ஆண்டுக்கும் மேலாகிறது. உங்களது படம் வெளியாகி ரொம்ப நாட்கள் ஆகிறதே என்கிறார்கள்! ஒரு படம் எடுத்து முடிக்க நூறிலிருந்து நூற்றி ஐம்பந்து நாட்கள் வரைக்கும் தேவைப்படுகிறது. பெரிய பெரிய கதைகளாக வருகிறது. அதை எடுக்க நிறைய காலதாமதம் ஆகிறது. இனி வரும் காலங்களில் முடிந்தவரையில் வருடத்திற்கு 2 படங்களையாவது கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்’’ என்றார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடந்த இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சிவகார்த்திகேயன் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, வீட்டில் உள்ள குழுந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது மிகவும் கவனமாக இருந்து வெடிக்கச் சொல்லுங்கள் என்றும் அறிவுரை கூறினார்.

#SivaKarthikeyan #Velaikkaran #Ponram #RajiniMurugan #Remo #24AMStudios #RDRaja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பராக் பராக் மேக்கிங் வீடியோ


;