10 சதவிகித கேளிக்கை வரி 8 சதவிகிதமாக குறைப்பு!

தமிழக அரசு 10 சதவிகித கேளிக்கை வரியை 8 சதவிகிதமாக குறைப்பு!

செய்திகள் 13-Oct-2017 3:38 PM IST VRC கருத்துக்கள்

தமிழக அரசு சமீபத்தில் தமிழ் சினிமா மீது கூடுதலாக 10 சதவிகித கேளிக்கை வரி அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு தமிழ் சினிமாவை சேர்ந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த கூடுதல் வரி விதிப்பால் தமிழ் சினிமா மேலும் பாதிப்புக்குள்ளாகும் என்பதால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் உட்பட தமிழ் சினிமாவின் பல்வேறு சங்கத்தினர் இந்த வரி விதிப்பை திரும்ப பெறவேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதனையொட்டி தமிழ் சினிமாவின் பல்வேறு சங்க பிரதிநிதிகளுடன் தமிழக அரசு பேச்சு வார்த்தையும் நடத்தி வந்தது.

இந்நிலையில் இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில் 10 சதவிகித வரியை 8 சதவிகிதமாக குறைக்க தமிழக அரசு முன் வந்துள்ளது என்பதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு நடந்து முடிந்ததும் விஷால் செய்தியாளர்களிடையே இந்த தகவல்களை தெரிவித்திருப்பதோடு, தியேட்டரில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்கள் தான் வசூலிக்க வேண்டும் என்றும், ‘மெர்சல்’ திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.

#TFPC #Vishal #TamilFilmProducersCouncil #GST #EntertainemntTax #Theaters #TamilNadu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காதல் கடல் தானா வீடியோ பாடல் - ராட்சசன்


;