தீபாவளி ரிலீஸில் அதிரடியாக களமிறங்கும் சரத்குமார்!

‘மெர்சல்’, ‘மேயாத மான்’ படங்களுடன் தீபாவளிக்கு ரிலீசாகும் ‘சென்னையில் ஒரு நாள்-2’

செய்திகள் 13-Oct-2017 2:01 PM IST VRC கருத்துக்கள்

கடந்த மாதம் (அக்டோபர்) 15-ஆம் தேதி ரிலீஸ் குறித்து பிறகு ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்ட படம் சரத்குமாரின் ’சென்னையில் ஒரு நாள்-2’. இப்போது இந்த படம் தீபாவளி ரிலீசாக திரைக்கு வரவிருப்பதை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ஏற்கெனவே விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’, கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், வைபவ் நடித்துள்ள ‘மேயாத மான்’ ஆகிய படங்கள் தீபாவளி வெளியீடாக வரவிருக்கும் நிலையில் இப்போது மூன்றாவது படமாக ‘சென்னையில் ஒரு நாள்-2’வும் வெளியாகவிருக்கிறது. தமிழக அரசு அறிவித்துள்ள 10 சதவிகித கேளிக்கை வரி தொடர்பான பேச்சு வார்த்தைகள், தியேட்டர் கட்டண குறைப்புக்கான வேண்டுகோள் போன்ற விஷயங்கள் ஒரு பக்கம் நடந்துக்கொண்டிருக்கும் நிலையில் திடீர் திடீரென்று பட வெளியிட்டு அறிவிப்புகளும் வெளியாகி கொண்டிருப்பதால் இந்த தீபாவளிக்கு மேலும் சில படங்கள் வெளியாக வாய்ப்பிருக்கிறது.

அறிமுக இயக்குனர் ஜே.பி.ஆர்.இயக்கியுள்ள ‘சென்னையில் ஒரு நாள்-2’ படத்தில் சரத்குமாருடன் அஞ்சனா பிரேம், சுஹாசினி, நெப்போலியன் முனிஸ்காந்த் முதலானோர் நடித்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

NOTA Trailer


;