அதிகபடியான கட்டணம் - தியேட்டர்களுக்கு விஷால் 5 நிபந்தனைகள்!

தியேட்டர்களில் அதிகபடியான கட்டணங்களை குறைக்க விஷால் விதித்த 5 நிபந்தனைகள்!

செய்திகள் 13-Oct-2017 12:41 PM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் தமிழக அரசு சினிமா மீது 10 சதவிகித கேளிக்கை வரியை அறிவித்தது. இந்த வரி அறிவிப்பு ஏற்கெனவே நலிந்த நிலையில் இருக்கும் தமிழ் சினிமாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தமிழ் திரைப்படத்தயாரிப்பாளர் சங்கம், மற்றும் சினிமாவை சேர்ந்த பல சங்கங்கள் இந்த வரி விதிப்பை தமிழக அரசு திரும்பபெற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பதோடு, அது சம்பந்தமாக அரசுடன் பேச்சு வார்த்தையும் நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முடிவு என்று கூறி நடிகர் விஷால் சார்பில் வெளியாகியுள்ள ஒரு செய்தி குறிப்பில் தியேட்டர்களுக்கு 5 நிபந்தனைகள் வைக்கப்பட்டுள்ளது. அந்த நிபந்தனைகளின் விவரம் வருமாறு”

1. அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும்.
2. டிக்கெட் பதிவு செய்வதற்கான ஆன்லைன் கட்டணம் வசூலிக்க கூடாது.
3. பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது.
4. தியேட்டர் கேன்டீனில் விற்கப்படும் பொருட்கள் அந்த பொருடகள் மீது போடப்பட்டுள்ள MRP விலையிலேயே விற்கப்பட வேண்டும்.
5. தியேட்டரில் அம்மா தண்ணீர் விற்கப்பட வேண்டும். பொதுமக்கள் எடுத்து வரும் தண்ணீர் பாட்டில்கள் தியேட்டருக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.


மேலே குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை மீறி செயல்ப்படும் தியேட்டர்கள் மீது அரசிடம் உடனடியாக புகார் அளித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

#TFPC #Vishal #TamilFilmProducersCouncil #GST #EntertainemntTax #Theaters #TamilNadu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ராட்சசன் ட்ரைலர்


;