தீபாவளி ரேசில் கடைசி நேர சர்பரைஸ்!

தீபாவளி ரிலீசாக ‘மெர்சலுட’ன் களமிறங்கும் வைபவின் ‘மேயாத மான்’

செய்திகள் 13-Oct-2017 12:05 PM IST VRC கருத்துக்கள்

‘மது’ என்ற குறும்படத்தை திரைக்கதையாக்கி அறிமுக இயக்குனர் ரத்னகுமார் இயக்கியுள்ள படம் ‘மேயாத மான்’. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ‘ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள இந்த படத்தில் வைபவ், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். சென்னை ராயபுரம் பின்னணியில் நடக்கும் காமெடி கலந்த காதல் கதை ‘மேயாத மான்’ என்று சொல்லப்படுகிறது. சந்தோஷ் நாராயணன், பிரதீப் இருவர் இசை அமைத்துள்ள இந்த படத்தை தீபாவளி ரேசில் களமிறக்கவிருப்பதாக (18-ஆம் தேதி) படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். விஜய், அட்லி கூட்டணியில் அமைந்துள்ள ‘மெர்சல்’ தீபாவளி ரிலீஸாக வரவிருக்கிறது. சசிக்குமார் நடிப்பில் முத்தையா இயக்கியுள்ள ‘கொடிவீர்ன்’ தீபாவளி ரிலீஸ் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது. ஆனால் ‘கொடிவீரன்’ படத்தின் ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் ஒன்றும் வெளியாகத நிலையில் இந்த தீபாவளிக்கு ‘மெர்சல்’, ‘மேயாத மான்’ ஆகிய 2 படங்கள் மட்டுமே திரைக்கு வரவிருக்கிறது.

#MeyaadhaMaan #Vaibhav #Mersal #Vijay #RathnaKumar #StoneBenchCreations #PriyaBhavanishankar #SanthoshNarayanan #Pradeep

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

NOTA Trailer


;