டிரைலர் இல்லாமலேயே வெளியாகும் மெர்சல்!

டிரைலர் இல்லாமல் வெளியாகிறது அட்லி, விஜய் கூட்டணியின் மெர்சல்!

செய்திகள் 12-Oct-2017 2:57 PM IST VRC கருத்துக்கள்

வருகிற 18-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது விஜய்யின் ‘மெர்சல்’. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீஸர் மற்றும் விளம்பர புரொமோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை தொடர்ந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தரும் செய்தியாக ‘மெர்சல்’ டிரைலர் வராது என்பதை இயக்குனர் அட்லி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இது விஜய் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தரும் செய்தியாகும். இருந்தாலும் இன்னும் ஒரு சில நாட்களில் ‘மெர்சல்’ வெளியாகவிருப்பதால் விஜய் ரசிகர்களை பொருத்துவரையில் இந்த தீபாவளி ‘மெர்சல்’ தீபாவளி தான்!

#Vijay #Mersal #SJSuriya #Samantha #Kajal #Vadivelu #Atlee #SriThenandalFilms #ARRahman #NithyaMenen

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வரும் ஆனா வராது வீடியோ பாடல் - சீமராஜா


;