‘2.0’ சவுண்ட் டிசைனர் நடிக்கும் ‘ஒரு கதை சொல்லட்டுமா’

ஆஸ்கர் விருது புகழ் ரசூல் பூக்குட்டி நடிப்பில் உருவாகும் படம் ‘ஒரு கதை சொல்லட்டுமா’

செய்திகள் 12-Oct-2017 11:06 AM IST VRC கருத்துக்கள்

‘ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்தின் மூலம் ஆஸ்கர் விருது பெற்ற ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி. தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கில படங்களில் தொடர்ந்து சவுண்ட் டிசைனராக பணியாற்றி வரும் ரசூல் பூக்குடி தற்போது ஷங்கர் இயக்கி வரும் ‘2.0’ படத்தில் பணியாற்றி வருகிறார். இதுவரை திரைக்கு பின்னால் இருந்து பணியாற்றி வந்த ரசூல் பூக்குட்டி முதன் முதலாக ஒரு திரைப்படத்திலும் தோன்றவிருக்கிறார். இந்த படம் உலக அளவில் பிரசித்தி பெற்ற கேரளா, திருச்சூர் பூரம் (திருவிழா) பின்னணியில் உருவாகிறது.

கடந்த அண்டு நடந்த இந்த பூரம் திருவிழா நிகழ்ச்சிகளை 20-க்கும் மேற்பட்ட கேமராக்கள் மற்றும் ஏராளமான மைக்ரோஃபோன்ஸ் மூலம் துல்லியமாக தனது குழுவினருடன் பதிவு செய்துள்ளார் ரசூல் பூக்குட்டி! ஆண்டுதோறும் நடக்கும் இந்த பூரம் திருவிழாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்களாம்! இந்த விழாஇல் 300-க்கும் மேற்பட்டவர்களின் செண்டை மேளம், அலங்கரிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட யானைகளின் அணிவகுப்பு, விடியற்காலையில் தொடர்ந்து பல மணிநேரம், நடைபெறும் வாணவேடிக்கை போன்ற நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமானது. இந்த பூரம் திருவிழா நிகழ்ச்சிகள் எல்லா மக்களும் கண்டு மகிழ் வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்படும் ‘ஒரு கதை சொல்லட்டுமா’ படத்தை பிரசாந்த் பிரபாகர் இயக்குகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகி வெளியாகவிருக்கிறது. இதனால், இந்த படத்தின் மூலம் ரசூல் பூக்குட்டி நடிகராகவும் அறிமுகமாகிறார்.

#ResulPookutty #2PointO #SlumdogMillionaire #Enthiran #Nanban #Kochadaiiyaan #Yaan #Remo

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சில் துணிவிருந்தால் - டிரைலர்


;